மீரட்:
பாரதியஜனதா ஆட்சி செய்தி வரும் உத்தரபிரதேசத்தில் பாலியல் அந்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், 9வது வகுப்பு மாணவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக rf மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீரட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி, தன்னுடன் படித்து வரும் சக மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்றும் ஆசிட வீசி விடுவேன் என்றும் தொடர்ந்து மிரட்டி வருகிறான். தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் எனது தந்தையை சந்தித்தும் மிரட்டி உள்ளான்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காவல் துறையில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
9ம் வகுப்பு மாணவியின் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவனை விசாரணைக்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.