
டில்லி
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கட்டாய வருகைப் பதிவு திட்டத்துக்கு எதிராக 98% க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாக்களித்துள்ளனர்.
ஜவர்கலால் நேரு பல்கலைக் கழகத்தில் வருகைப் பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டது. அதை பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்தன. அதை ஒட்டி மாணவர்களிடையே இந்த கட்டாய வருகைப் பதிவுக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில் 4456 மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு வாக்களித்தனர். கட்டாய வருகைப் பதிவுக்கு எதிராக 4388 பேர் (அதாவது 98.7% பேர்) வாக்களித்துள்ளனர். ஆதரவாக 41 பேர் (0.92%) வாக்களித்தனர். மீதமுள்ள 27 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
Patrikai.com official YouTube Channel