சென்னை: சென்னையில், சாலையோரம் கேட்பாரற்று பல நாட்களாக கிடந்த 973 வாகனங்களை ஏலம் விட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில், சாலையோரமாக பல வாகனங்கள் பல மாதங்கள் வரை கேட்பாறந்து காணப்படுகின்றன. இதனால், அந்த பகுதிகளில் வாகன நெரிசல்கள் காணப்படுகிறது- இதையடுத்த, போக்குவரத்து காவல்துறையினல், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு கேட்பாறந்து கடந்த வாகங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி, சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் வாகன உரிமையாளர்கள் ஆவணங்களுடன் மீட்டது போல கேட்பாரற்று கிடக்கும் 973 வாகனங்களை ஏலம் விட காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதற்காக அந்த 973 வாகனங்களை காவல்துறையினர், சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு வைத்துள்ள னர். இந்த வாகனங்கள் வரும் 26-ம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த ஏலத்துக்கான முன்பதிவு ஏப்ரல் 19 மற்றும் 20-ம் தேதிகளில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர் என்றும், அதைத்தொடர்ந்து, வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் செலுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.