நெல்லை: சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டியான பெருமாத்தாள் இன்று ஊராட்சி மன்ற தலைவியாக அதிகாரப்பூர்வமகா பதவி ஏற்றார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த செல்வராணி 440 வாக்குகளும் அதற்கு அடுத்தவர் உமா என்பவர் 72 வாக்குகளும் பெற்றார்.
பாட்டி பெரும்மாத்தாள் வெற்றியை அவ்வூர் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அவர் பதவியேற்றார். அவருக்கு அதிகாரிகளும் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.