புதுக்கோட்டை: எல்லைதாண்டி   மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை  இலங்கை கடற்படை.கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, தமிழக மீனவர்களுக்கு தலா இரண்டரை கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை நீதிமன்றம்,  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை சிறையில்அடைத்து வருவதுடன், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகிறதுமு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ள நிலையில், அந்த சம்பவத்தில் மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கை கடற்படையினர் ரோந்து படகு மோதி மீனவர் ஒருவர் அண்மையில் உயிரிழந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதேபோல் பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் (ஆகஸ்ட் 8) நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 30க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தநிலையில்,  நெடுத்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடல்பகுதியில் வைத்து கைது செய்துள்ள்னர். இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.