டில்லி,
டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் போராடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஐடி நிறுவனங்கள் அன்மைக் காலமாக வளர்ச்சியில் தடுமாறிக்கொண்டும் போராடிக் கொண்டும் வருகின்றன. ஜூன் மாத காலாண்டு முடிவின் படி இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
செப்டம்பர் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட டிசிஎஸ் நிலையான நாணய கொள்கை அடிப்படையில் 2.5 சதவீதத்தைவிடக் குறைவான 1 சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்று உள்ளது.
நிலையான நாணய கொள்கையில் வளர்ச்சி விகிதம் ஜூன் மாதக் கணக்கின் படி வருடத்திற்கு 10.1 சதவீதம் இருக்க வேண்டும் ஆனால் அது குறைந்து 7 சதவீதமாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது நிறுவனத்திடம் இருந்து மென்பொருள் சேவை பெற்று வருபவர்களில் குறிப்பாக வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு சேவை வழங்குநர்கள் தாற்காலிகமாக முதலீடுகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்த உடன் நிறுவனத்தின் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது என்று அறிவித்தது.
அவ்வாறு அறிவித்த போதிலும் கடந்த காலாண்டில் 1 சதவீதம் வளர்ச்சியே பெற இயலும் என்று கணித்த போது 1.2 சதவீதம் வளர்ச்சியை எட்டியது.
சில்லைரை வணிகத்தில் வருவாய் மொத்தமாக குறைந்து உள்ளதாக கூறியுள்ள டிசிஎஸ் இதனால் இந்தியாவிலும் வர்த்தகம் மந்தமான நிலையிலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பிற பிரிவுகளில் 3 முதல் 4 சதவீதம் வரை வளர்ச்சி இருந்த போதிலும் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனப் பங்குகளின் விலை வெள்ளிக்கிழமை மிகவும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்ற மாத்துடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலையில் உள்ளது.
புதன் கிழமை வரை 19 சதவீதம் பீரிமியம் விலையில் வர்த்தகம் ஆகி வந்த வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை ஆன இன்று 4 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இப்படியே சென்றால் பிரீமியம் விலையே இல்லாமல் போகும் நிலைமையில் உள்ளது. இன்ஃபோஸிஸ் நிறுவன முடிவுகளும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் போது நிறுவனத்தின் மார்ஜின் குறைவாகவே இருக்கும். எப்போது நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதில் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதற்காகத் துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களுடன் பிராஜக்ட்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.
கடந்த சில காலாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்து வருவதைப் பார்க்கும் போது ஐடி துறை இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்திய நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அக்சன்சர், கேப்ஜெமினி நிறுவனங்களின் இந்தியா மற்றும் உலகளவில் தங்களது சந்தையை அதிகரித்துள்ளதும் என்று கூறப்படுகிறது.
Source: www.goodreturns.in