தேனி:

லையேற்றப் பயிற்சிக்காக சென்று, குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

39 பேர் டிரெக்கிங் (மலையேற்ற பயிற்சி) சென்ற நிலையில் 27பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 9 பேர் இறந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உயிரிழந்தவர்களின் விவரம்  வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சென்னையை, சுசிலா,  ஹேமலதா, புனிதா, சுபா, அருண் ஆகிய 5 பேரும்,  கோவையை சேர்ந்த விபின்,  ஈரோட்டைச் சேர்ந்த  விவேக்.  திவ்யா, தமிழ்செல்வன் ஆகியேர்.

இவர்களில், தமிழ்ச்செல்வன்,  திவ்யா   கணவன்-மனைவி என்றும், இதுவரை  2 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]