கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் 9 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் இருந்த சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோர் உயிரிழந்தனர். தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

எனவே அவரது கட்சிப் பதவியைப் பறித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.  இதையொட்டி  மேற்குவங்க  அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது

இன்று பாபுல் சுப்ரியோசினேகசிஸ் சக்ரவர்த்திபார்த்தா பௌமிக்உதயன் குஹாபிரதீப் மஜூம்டர்தஜ்முல் ஹொசைன்சத்யஜித் பர்மன்பிர்பாஹா ஹன்ஸ்தா மற்றும் பிப்லாப் ராய சவுத்ரி  உள்ளிட்ட 9 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்இந்த புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் ஆளுநர் இலகணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.