44வது செஸ் ஒலிம்பியாட்: 6வது சுற்று போட்டிகள் தொடங்கின…

Must read

மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் இருந்து தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழ்நாட்டில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 சுற்று போட்டிகள் முடி வடைந்த நிலையில், இன்று  6வது சுற்று போட்டிகள் kமாலை 3மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது; அவருக்கு பதிலாக ரோனக் சத்வானி பங்கேற்றுள்ளார்.

இன்றைய போட்டியில், பொதுப்பிரிவில் இந்திய ஏ அணி உஸ்பேகிஸ்தான் உடன் மோதுகிறது.

இந்திய பி அணி அர்மேனியாவையும், இந்திய சி அணி லிதுவேனியாவையும் எதிர்கொள்கின்றன. கார்த்திகேயன் முரளிக்கு பதிலாக அபிஜித் குப்தா இன்று விளையாடுகிறார்.

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி ஜார்ஜியாவை சந்திக்கிறது. இந்திய மகளிர் பி அணி செக் குடியரசையும், சி அணி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன.

இந்திய வீரர்கள் பக்தி குல்கர்னி, சவுமியா சாமிநாதன், பிரத்யுஷா ஆகியோருக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்ட வர்ஷினிக்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து சுற்றுகளில் முடிவில் பொது பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய ஏ அணி 5 சுற்றுகளில் 9 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

More articles

Latest article