மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென காங்கிரஸ் ஆதரவு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து பதவி பெற்றுள்ள நிலையில், அவர்களை  தகுதிநீக்கம் செய்யவேண்டும்  மகாராண்டிரா சட்டப்பேரவை சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் (சரத்பவார் மருமகன்) தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்து, ஆளும் பாஜக சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தனர். இது மகாராஷ்டிராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக  அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரிடம், தங்களது கட்சியை சேர்ந்த 9 எம்எல்எக்களை  தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம். . இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம் கட்சியை விட்டுச் செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை.  இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது. அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில்  தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில், 43 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக  அங்கிருந்து வரும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

பதவிக்காக அவ்வப்போது ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக மாறுவது அஜித்பவாரின் வாடிக்கையான செயலாகவே  உள்ளது. முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு பா.ஜ.,வின் பட்னாவிசுடன் இணைந்து அஜித் பவார் துணைமுதல்வராக பதவியேற்றார். இதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் கட்சிக்கு அவர் திரும்பினார். பிறகு, உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போதும், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். பின்னர் தாக்கரே ஆட்சி கவிழ்ந்ததும், மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்து பதவி பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவரது கனவு தற்போது பலித்துள்ளது. நேற்று எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென கவர்னரை சந்தித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்து, பதவி பெற்றுக்கொண்டார்.  அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்பது இது 8வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. பதவிக்காக பச்சோந்தியாக மாறுவது அவரது அரசியல் வாழ்க்கையாகவே மாறி உள்ளது.

அஜித்பவாரின் நடவடிக்கை, மகாராஷ்டிரா அரசியல் மட்டுமின்றி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியிலும் புயலை கிளப்பி உள்ளது.