சென்னை: தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக சார்பில், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, தளவாய் சுந்தரம், ஓஎஸ் மணியன், ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்சி சம்பத் ஆகிய 9 பேர் தலைமையில் குழுக்கள் அமைத்து, இவர்களுக்கு கீழ் உறுப்பினர்களையும் நியமித்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel



