சென்னை: தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு பணியிலிருந்து திரும்பிய ராஜேந்திர ரத்னூ, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • ராஜேந்திர ரத்னூ – முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
  • ஷில்பா பிரபாகர் சதீஷ் – அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  • ச.விஜயகுமார் – கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், நில சீர்திருத்தம்
  • மா.வள்ளலார் – அரசு செயலாளர், சமூக சீர்த்திருத்தத் துறை
  • எஸ்.நாகராஜன் – வணிக வரித்துறை ஆணையர்
  • பொ.சங்கர் – அரசு செயலாளர், உயர் கல்வித்துறை
  • சி.சமயமூர்த்தி – அரசு செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை
  • கோ.பிரகாஷ் – முதன்மைச் செயலர், உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
  • சு.பிரபாகர் – தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
  • நா.வெங்கடேஷ் – அரசு சிறப்புச் செயலாளர், நிதித்துறை
  • ஆர்.லில்லி – அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறை
  • சு.கணேஷ் – அரசு சிறப்புச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை
  • வீர் பிரதாப் சிங் – அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, சென்னை
  • கே.எம்.சரயு – அரசு இணைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை
  • துரை ரவிச்சந்திரன் – துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை.
  • க.கற்பகம் – அரசு இணைச் செயலாளர், உயர் கல்வித்துறை
  • ஆர்.வி.ஷஜீவனா – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், சென்னை
  • ஸ்ரேயா பி.சிங் – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
  • ப.மதுசூதன் ரெட்டி – இயக்குநர், நகராட்சி நிர்வாகம்
  • சு.சிவராசு – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம்
  • ஜெ.விஜயராணி – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்
  • தா.கிறிஸ்துராஜ் – இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
  • கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் – அரசு கூடுதல் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
  • ச.உமா – அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சென்னை
  • வீ.ப. ஜெயசீலன் – இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி
  • மா.சௌ. சங்கீதா – இயக்குநர், சமூக நலம்
  • மா.பிரதீப் குமார் – இயக்குநர், பேரூராட்சிகள்
  • ராஜ கோபால் சுன்கரா – இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்
  • ச.அருண்ராஜ் – மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்
  • நாரணவரே மணிஷ் – மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
  • வெ.சரவணன் – மாவட்ட ஆட்சியர், திருச்சி
  • தி.சினேகா – மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு
  • கே.ஜே.பிரவீன் குமார் – மாவட்ட ஆட்சியர், மதுரை
  • என்.ஓ.சுகபுத்ரா – மாவட்ட ஆட்சியர், விருதுநகர்
  • ச.கந்தசாமி – மாவட்ட ஆட்சியர், ஈரோடு
  • துர்கா மூர்த்தி – மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
  • கா.பொற்கொடி – மாவட்ட ஆட்சியர், சிவகங்கை
  • ஆஷா அஜித் – தலைமை இயக்க அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்
  • எம்.பி.அமித் – ஆணையர், திருப்பூர் மாநகராட்சி
  • எச்.ஆர்.கௌசிக் – வட்டார துணை ஆணையர் (மத்தி) பெருநகர சென்னை மாநகராட்சி
  • மோனிகா ராணா – ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி
  • வி.மதுபாலன் – ஆணையர் , திருச்சி மாநகராட்சி
  • பானோத் ம்ருகேந்தர் லால் – ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி
  • ரா.சரண்யா – ஆணையர், ஆவடி மாநகராட்சி
  • ர. அனாமிகா – இணை ஆணையர், நகராட்சி நிருவாகம், சென்னை
  • லலித் ஆதித்ய நீலம் – கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சென்னை
  • அஃதாப் ரசூல் – வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி
  • நிஷாந்த் கிருஷ்ணா – ஆணையர், ஓசூர் மாநகராட்சி
  • அர்பித் ஜெயின் – ஆணையர், ஈரோடு மாநகராட்சி
  • ர.அ.பிரியங்கா – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்
  • பல்லவி வர்மா – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்
  • அபிலாஷா கௌர் – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி
  • திவ்யான்ஷீ நிகம் – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்
  • ஆல்பி ஜான் வர்கீஸ் – இயக்குநர், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
  • ம.கோவிந்த ராவ் – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்

ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சுற்றுலாத்துறை இயக்குநராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் இயக்குநரான விஜயகுமார் நில சீர்திருத்தம் செயலாளராகவும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரான வள்ளலார் சமூக சீர்திருத்தத் துறை செயலாளராகவும், நிதித்துறை சிறப்பு செயலாளரான நாகராஜன் வணிக வரி ஆணையராகவும், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இயக்குநரான சங்கர் உயர்கல்வித்துறை செயலாளராகவும், உயர்கல்வித்துறை செயலாளரான சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத் துறை செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மனித வள மேலாண்மை செயலாளரான பிரகாஷ் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராகவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் பிரபாகர் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கும்,

மத்தியஅரசு பணியிலிருந்து திரும்பிய வெங்கடேஷ் நிதித்துறை அரசு சிறப்பு செயலாளராகவும், சமூக நலத்துறை ஆணையரான லில்லி போக்குவரத்து துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளரான கணேஷ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலாளராகவும்,

ராமநாதபுரம் ஆட்சியரான வீர் பிரதாப் சிங் பொதுத்துறை செயலாளராகவும், பொதுத்துறை செயலாளரான சரயு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளராகவும், உயர் கல்வித்துறை இணை செயலாளரான ரவிச்சந்திரன் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளரான கற்பகம் உயர் கல்வித்துறை இணை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளரான ஷஜீவனா தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநரான ஸ்ரேயா பி.சிங் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குநராகவும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான மதுசூதன் ரெட்டி நகராட்சி நிர்வாக இயக்குநராகவும், நகராட்சி நிர்வாக இயக்குநரான சிவராசு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் இயக்குநராகவும்,

சென்னை மாநகராட்சி இணை ஆணையர் விஜயராணி தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் இயக்குநராகவும், திருப்பூர் ஆட்சியரான கிறிஸ்துராஜ் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரான கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் ஆட்சியரான உமா சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரான ஜெயசீலன் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும், மதுரை மாவட்ட ஆட்சியரான சங்கீதா சமூக நலத்துறை இயக்குநராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியரான பிரதீப் குமார் பேரூராட்சிகள் இயக்குநராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியரான ராஜ கோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராகவும், செங்கல்பட்டு ஆட்சியரான அருண்ராஜ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் ஆணையரான நாரணவரே மனிஷ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், திருச்சி மாநகராட்சி ஆணையரான சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மற்றும் செயல் இயக்குநரான சினேகா செங்கல்பட்டு ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையரான பிரவீன் குமார் மதுரை மாவட்ட ஆட்சியராகவும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக சகபுத்ரா விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், ஆவடி மாநகராட்சி ஆணையரான கந்தசாமி ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன இயக்குநரான துர்கா மூர்த்தி நாமக்கல் ஆட்சியராகவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநரான பொற்கொடி சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்து ஆஷா அஜித் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் தலைமை இயக்க அலுவலராகவும், சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையரான அமித், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், நீலகிரி மாவட்ட உதகமண்டலம் கூடுதல் ஆட்சியராக இருந்த கவுஷிக் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையராகவும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியரான மோனிகா ராணா திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரான மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், கோவை வணிக வரி இணை ஆணையரான பானோத் ம்ருகேந்தர் லால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரான சரண்யா ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் ஆணையரான அனாமிகா நகராட்சி நிர்வாகம் இணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாக இணை ஆணையரான லலித் ஆதித்ய நீலம் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் ஆணையராகவும், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அதாப் ரசூல் சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையராகவும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரான நிஷாந்த் கிருஷ்ணா ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், ஈரோடு மாவட்டம் கூடுதல் ஆட்சியரான அர்பித் ஜெயின் ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், ஒசூர் கிருஷ்ணகிரி மாவட்ட சார் ஆட்சியரான பிரியங்கா கடலூர் மாவட்டம் கூடுதல் ஆட்சியராகவும், திருவண்ணாமலை சார் ஆட்சியரான பல்லவி வர்மா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், பரமக்குடி ராமநாதபுரம் சார் ஆட்சியரான அபிலாஷா கவுர் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் கூடுதல் ஆட்சியராகவும், விழுப்புரம் மாவட்டம் சார் ஆட்சியரான திவ்யான்ஷீ நிகம் ராமநாதபுரம் மாவட்டம் கூடுதல் ஆட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குநரான ஆல்பி ஜான் வர்கீஸ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தலைமை செயல் அலுவலராகவும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தலைமை செயல் அலுவலரான கோவிந்த ராவ் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், 5 மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.