டெல்லி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடும் போது இந்த விவரங்களை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், அசாமில் 126 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைதளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 34.73 சதவிகிதம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும். வீடு, வீடாக சென்று பரப்புரையில் ஈடுபடுவதற்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.