சென்னை: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் சேர கடந்த 20 நாட்களில் 8,862 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டத்தை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தார். இந்த திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும். அத்துடன் ரூ. 50,000 வரை மானியமும் 5% வட்டி மானியமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் ரூ. 3,00,000 வரை வங்கி கடன் உதவியும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 20 நாட்களில் 8,862 பேர் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. விண்ணப்பிப்போரை தேர்வு செய்வதற்கு பணிக்குழு உருவாக்கப்பட்டு அந்த குழு பயனாளிகளை தேர்வு செய்து வருகிறது. குடும்பத் தொழிலை அடிப்படையாக வைக்கலாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களுக்கு கடன் உதவி வழங்குவதால் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் இணைந்து பிரதம மந்திரி விஸ்வகர்மா ஷ்ரம் சம்மான் யோஜனா 2025ஐத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் 2022 இல் தொடங்கப்பட்டது மற்றும் இது கைவினைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் அமைப்புசாரா துறையில் கைவினைஞராகவும் பணிபுரிந்தால், பதிவு செய்த பிறகு விஸ்வகர்மா யோஜனா நன்மைகள் 2025 ஐப் பெறலாம்.
இதன் கீழ் அனைத்து கைவினைஞர்களும் அரசாங்கத்திடம் இருந்து குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் கடனைப் பெறுவார்கள். திறன்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல். உங்களிடம் ஏதேனும் திறன் இருந்தால் அல்லது நீங்கள் ஒரு கைவினைஞராக இருந்தால், நீங்கள் PM விஸ்வகர்மா யோஜனா 2025 இல் பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை, 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, இதை பின்பற்றி, கலைஞர் கைவினை திட்டத்ம் என்ற பெயரில் திட்டத்தை அறிவித்து, அதற்கு நிதி வழங்கப்படும் என கூறி விண்ணப்பங்களை பெற்று வருகிறது,