சென்னை:
மிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளதாகவும், அவர்களில் 86 பேர்கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவா்களில் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மூலம் கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பிறகு இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனைச் சுட்டிகாட்டி இந்தியாவில் முக்கியமாக சமூகவலைதளங்களில்  முஸ்லிம்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் இது தொடர்பாக 70புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய அமைப்பு சார்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கினை நீதிபதி எம். எம். சுந்த்ரேஷ் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. ஏற்கனவே நடத்திய .விசாரணையின்போது, இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து,  தமிழக கூடுதல் டிஜிபி வி.பாஸ்கரன், இது தொடர்பாக பிரம்மான பத்திரிகை  தாக்கல் செய்துள்ளதார். அதில், முஸ்லிம் சமூகத்திற்கு  எதிராக போலி செய்திகள் மற்றும் வகுப்புவாத வெறுப்புகளை பரப்பியதற்காக மாநிலத்தில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை, 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்களில்  86 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள இது தொடர்பாக 700 க்கும் மேற்பட்ட புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.