சென்னை

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 8000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நாளை கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. எனவே வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நகரில் மெரினா, சாந்தோம் பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் மக்கள் கடலில் இறங்காதவாறு கண்காணிக்கப்பட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா, டிரோன் மூலம் கண்காணிக்கபடுகிறது.

காஅவல்துறையினர் சென்னையில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.,பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.