சென்னை:

ரேநாடு ஒரே ரேஷன் திட்டத்தால் மாநில அரசுக்கு ரூ.84ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதை பொது விநியோக  ஊழியர்கள் மூலம் நிறைவேற்றியிருந்தால் இந்த பணம் சேமிக்கப்பட்டிருக்கும் என்று பொது விநியோக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும், எந்த மாநிலத்தவரும் பெற்றுக்கொள்ளும் வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’  திட்டத்தை மத்திய அரசு  அமல்படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக 12 மாநிலங்களில் ஜனவரி 15ந்தேதி முதல்  அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் தமிழகம் உள்பட  கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்கள் இணைந்துள்ளன. தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மட்டும் தற்போது இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்தாமல், பொது விநியோக ஊழியர்களைக் கொண்டே நிறைவேற்றி இருந்தால் அரசக்கு 84,000 கோடி ரூபாய் சேமிப்பு கிடைத் திருக்கும், பொதுவிநியோக ஊழியர் சங்க மாநில நிர்வாகி குமரி செல்வன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற  பொதுவிநியோக ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து பொதுவிநியோக ஊழியர்கள் பணியாளர்கள்  கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மாநில நிர்வாகி குமரி செல்வன், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்தாலும், அதனை ஏஜென்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்  பொதுமக்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக அரிசி 5%, பாமாயில் 40% குறைவாக விநியோகம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகஅரசுக்கு ரூ.ரூ. 84,000 கோடி அளவில் இழப்பு ஏற்படும். எனவே இந்த திட்டத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களிடம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அவ்வாறு  செய்தால் அரசுக்கு ரூ. 84,000 கோடி ரூபாய் சேமிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.