புதுடெல்லி:
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட ’83’ திரைப்படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு அளித்துள்ளது.

கடந்த 1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்றது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர்சிங் நடிப்பில் உருவாக்கி வருகிறது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
வரும் 24ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டெல்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel