
கனவுகள் வரும்போதெல்லாம்
உந்தன் நினைவுகள் தான் முதலில் வரும்..!
83 வயது இளைஞனே!
சுறுசுறுப்பில் நீ,
எறும்பை தோற்கடித்தாய்..!
ஞானத்தில் பல ஞானிகளை,
தோற்கடித்தாய்..!
அடக்கத்தில் இந்த பூமியை,
தோற்கடித்தாய் ..!
பலத்தால் உலக நாடுகளை,
தோற்கடித்தாய்..!
அறிவால் அந்த விண்வெளியையும்,
தோற்கடித்ததாய் ..!
அன்பால் எங்களின் மனங்களையும்,
தோற்கடித்தாய்…!
நீ அக்னி சிறகு கொண்டு ஆகாயத்தில் வட்டமடித்ததால்,
உன் சேவை அங்கும் தேவையென!
அது உன்னை தன்னக படுத்தி கொண்டதோ??
கனவையும் உந்தன் நினைவையும் எப்படி பிரிக்கமுடியாதோ??
அதுபோலவே உன்னையும் இம்மண்ணையும்,
ஒருபோதும் பிரிக்கமுடியாது..!!
உன்னிடம் வசப்பட்டது அந்த விண்வெளி மட்டுமல்ல-இந்த
மண்ணும் மனிதமும் தான்…!!
-ஜெ.அன்பரசன் https://www.facebook.com/anbulovezorro
Patrikai.com official YouTube Channel