வாஷிங்டன்:
பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள 8,290 இந்தியர்களின் விபரங்களை கேட்டு இந்திய அரசு முகமைகளிடம் இருந்து 6,324 கடிதங்கள் எழுதியுள்ளது.
இது உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 38 ஆயிரத்து 951 அமெரிக்கர்களின் பேஸ்புக் தகவல்களை கேட்டு 23 ஆயிரத்து 854 கடிதங்களை அமெரிக்க அரசு அமைப்புகள் எழுதியுள்ளது. இந்த எண்ணிக்கை என்பது 2016ம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே என்பது கூடுதல் தகவல்.
கடந்த 2015ம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7,018 பேரில் கணக்குளை கேட்டு 5,561 கடிதங்களை இந்தியா எழுதியுள்ளது. இந்த ஆண்டு இது கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் 53.59 சதவீத தகவலகளை மட்டுமே அளிக்க முடிந்ததாக பேஸ் புக் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 50 சதவீத தகவல்கள் அளிக்கப்பட்டது.
உலகளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசாங்கங்கள் தகவல் கேட்பது 27 சதவீதம் உயர்ந்துள்ளது. 46,710 என்று இருந்த கடிதங்களின் எண்ணிக்கை 59, 229 ஆக உயர்ந்துள்ளது. எங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை ரகசியம் காக்கப்பட வேண்டும். அதனால் சட்டத்திற்குட்பட்டு தகவல்கள் அளிக்கப்படுகிறது என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.