தமிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் இதழ், கடந்த டிசம்பர் 12ம் தேதியில் இருந்து முடக்கப்பட்டிருக்கிறது.
அன்று முதல், இந்த பக்கத்தை கிளிக் செய்தால், “சமூகவிரோதிகளால் இந்தப்பக்கம் முடக்கப்பட்டுள்ளது” என்றே வருகிறது. ( “Official website of “Dr.Namadhu MGR” www.drnamadhumgr.com was hacked by the anti socialelements. In view of it the web site has been temporarily suspended. Regret for the inconvenience”)
“நவீன யுகத்தில் அ.தி.மு.க. அரசு வெற்றி நடை போடுகிறது. உலகில் உள்ள அத்தனை நவீன அறிவியல் முறைகளையும் தமிழக அரசு செயல்படுத்துகிறது” என்றெல்லாம் பேசுகிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
விஷன் 2023 என்ற தொலைநோக்கு திட்டத்தை எல்லாம் அறிவித்தார். ஆனால் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரது கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு இன்றோடு 82வது நாளாக முடங்கிக்கிடக்கிறது.