தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

Must read

சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  18,545 ஆக அதிகரித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 558 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  18,545 ஆக  உயர்ந்துள்ளது.
இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 567 பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  9,909 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 817 பேரில் 558 பேர் சென்னை, 139 பேர் வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள், இவர்களில் 138  பேர் மஹாராஷ்டிரா, ஒருவர் கேரளாவில் இருந்தும் தமிழகம்  வந்தவர்கள்
இன்று ஒரே நாளில் 11,231 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,42,970 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 10,661 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4,23,018 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article