வயது, ஜாதி, மதம், மொழி, இனம் போன்ற எதுவுமே தேவை இல்லாத ‘கண்றாவி’க்கு பெயர் தான், காதல் என்பதை நிரூபிக்கும் ஒரு நிஜ சம்பவம் இது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 81 வயது கிழவியான ஐரிஷ் ஜோனிஸ் என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

கணவனை விவாகரத்து செய்திருந்த ஐரிஷுக்கு, எகிப்தில் இப்ராஹிம் என்ற நண்பர் கிடைத்தார். அவருக்கு வயது- 35.

முதல் பார்வையிலேயே இருவருக்குள்ளும் காதல் நெருப்பு பற்றிக்கொண்டது.

விசா முடிந்ததால் லண்டன் திரும்பிய ஐரிஷால், இப்ராஹிமை மறக்க முடியவில்லை. மறுபடியும் எகிப்து சென்று காதலனை சந்தித்தார்.

இப்ராஹிமுடன் எகிப்தில் வாழவே ஐரிஷ், விரும்பினார். ஆனால் அந்த நாட்டின் வெப்பம், உணவு பழக்கம் போன்றவை அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

“நாம் கல்யாணம் செய்து கொண்டு லண்டனில் வாழலாமா?” என காதலன் இப்ராஹிமிடம் கேட்க, அவர் ஓ.கே. சொன்னார்.

அப்புறம் என்ன நடந்தது?

இருவரும் லண்டன் திரும்பினர்.

கல்யாணம் செய்து கொண்டனர்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடுமை என்ன வென்றால், இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட கிழவி ஐரிஷுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இருவருமே 50 வயதை தாண்டியவர்கள்.

இந்த கல்யாணத்தை, நெட்டிசன்கள் அபூர்வ ராகங்களில் சேர்த்து விமர்சிக்க, வேறு சிலர் அலங்கோல ராகத்தில் சேர்த்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.

– பா. பாரதி