சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள  டிரேடு  சென்டரில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டு  இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வதுஅலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து,  சென்னை  நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் 800 ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள்  கொண்ட கொரோனா வார்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக 300 படுக்கைகள் தயாராகி உள்ளன. இந்த படுக்கைகள் இன்றுமுதல் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. முன்னதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் டிரேடு சென்டரில் அமைக்கப்பட்டு வந்த   கொரோனா பராமரிப்பு மையத்தை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.