சென்னை:
சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளனார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசியவர்,  சென்னையில் இதுவரை ஐந்தரை லட்சம் ஆர்.டி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினசரி 15,000 கொரானா பரிசோதனைகள் மேற்கொள்ள முயற்சித்து வருகிறோம், அதே வேளையில்,  12,000க்கும் குறைவாக பரிசோதனைகள் செல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
மேலும், இந்தியாவிலேயே  அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும் முதல் பெருநகரம் சென்னை என்ற கூறியவர்,  சென்னையில் 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர், இறப்புகளையும்  குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னையில்,  60-70% வணிக இடங்களில் கை கழுவும் வசதிகள் செய்யப்பட்டு விட்டன.  ஷாப்பிங் செய்தால் 10 நாட்களுக்கு தேவையானவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி வெளியில் செல்வதை தவிருங்கள்.
நோய் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து முடித்தவுடன் முடிவுகளுக்காக காத்திராமல் உடனடியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்கிறோம் என தெரிவித்தார்.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல  சுமார் 5 லட்சம் பேர் இதுவரை இ-பாஸ்க்கு விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.