காரைக்கால்
காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூர் கடற்கரையில் சுமார் 80 அடி நீள திமிங்கலம கரை ஒதுங்கி உள்ளது.
காரைக்காலை அடுத்த வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் உள்ளது. அருகில் உள்ள வாஞ்சூர் கடற்கரையில் நேற்று சுமார் 80 அடி நீளம் உள்ள ஒரு நீல திமிங்கிலம் கரை ஒதுங்கியது. காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்குத் துறைமுக ஊழியர்கள் இது குறித்து தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீன் வளத் துறையினர் அங்குச் சென்று பார்த்தனர். பிறகு காரைக்காலைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உதவியுடன் 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின், அந்த திமிங்கிலத்தைப் பத்திரமாக மீட்டு, கயிற்றில் கட்டி இழுத்துச் சென்று நடுக்கடலில் விட்டனர்.
80 அடி நீளமுள்ள நீல திமிங்கிலம் தானாகக் கரையில் ஒதுங்கியது இங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.