டில்லி

டந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டில்லியில் புகை மூட்டம் குறையாமல் உள்ளதால் 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று மாசுப்பாடு என்பது இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது.   அதுவும் டில்லியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  டில்லியின் சுற்றுப்புற பகுதிகளான அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இதே நிலை உள்ளது.   கடந்த ஒரு வாரமாக மாசு மூட்டம் கலந்த பனியால் புகை மூட்டமாக உள்ளது.

இந்த புகை மூட்டத்தினால்  69 ரெயில்கள் தாமதமாக பயணிக்கின்றன.   8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இது தவிர 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  வரும் 14ஆம் தேதி அல்லது 15ஆம் தேதிக்குள் மழை பெய்யலாம் என வானிலைய ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.   மழை பெய்தால் மற்றும் காற்றின் வேகம் அதிகரித்தால் இந்த மாசு மூட்டம் குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தனது கருத்தை கூறி உள்ளது.