புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடைபெறுகிறது.
50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே உள்ள வேங்கை வயலில் தீண்டாமைப் பிரச்சினையில் மனிதாபிமானமற்ற முறையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தடயவியல் ஆய்வில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் ஆகியோரது மனித கழிவு கலக்கப்பட்டதாக டி.என்.ஏ. பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 11 பேர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.
ஆனால், போலீசாரின் சம்மனை ஏற்று 3 பேர் மட்டுமே இன்று டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஆஜராகி உள்ளனர். எஞ்சியுள்ள 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளனர்.