சென்னை: 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது இன்று மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதையொட்டி, கல்வித்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று (03.03.25) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது. நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்2 தேர்வு குறித்த தங்களது அச்சங்கள், விளக்கங்களை மாணவர்கள் மற்றும்பெற்றோர்கள் 94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுப் காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல் முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.