ன்னை

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரை ஏப்ரல் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Sample pic

சென்னையில் பைக் ரேஸ், பைக் சாகசம் ஆகியவற்றில் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதில் பல சிறுவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு மற்ரும் படுகாயம் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.   இதையொட்டி சென்னை மாந்கர காவல்துறை கடும் சோதனை நடத்தி வருகிறது

 சென்னை மெரினா கடற்கரை காமராஜார் சாலையில் பைக் சாகசம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.   இதையொட்டி சென்னை காவல்துறையினர் வீடியோ பதிவுகளில் காணப்பட்ட பைக்குகளின் பதிவு எண்களை வைத்து 2 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேரைக் கண்டுபிடித்து கைது செய்து பைக்குகளை  பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செயுயபப்ட்ட 8 பேரையும் ஏப்ரல் 4ஆம் தேதி  வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு இடப்பட்டுல்ளது.  இதையொட்டி சாதிக், ஆசிப், ரஹ்மத்துல்லா, முகேஷ், ஹரிஹரன், ரோமன் ஆகிய 6 பேர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 சிறார்கள் சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

[youtube-feed feed=1]