சென்னை:

சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த எத்தியோப்பிய நாட்டைச்சேர்ந்த முஸ்லிம்கள் ( 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள்) 8 பேர் சென்னையில் உள்ள மசூதி ஒன்றில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் உடனே சொந்த நாடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. மேலும் இங்கே தங்கியுள்ளவர்கள்  அரசுக்கு  தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது.

ஆனால், சுற்றுலா விசாவில் வந்த பலர், தமிழகத்தில் தங்கியிருந்து மதப்பிரச்சாரம் உள்பட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. அவர்களை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கடந்த வாரம் பெரியமேடு மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் உள்ள மசூதி, தர்கா போன்றவற்றில் தங்கியிருந்த பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலைய பகுதி அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு மசூதியில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருக்கள் 5 ஆண்கள் 3 பெண்கள் சட்டவிரோதமாக பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

சுற்றுலா விசாவில் வந்தவர்கள், அரசின் அறிவுறுத்தலை மதிக்காமல்,  மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை  எச்சரித்த காவல்துறையினர், கொரோனா பரிசோதனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

ஆனால், அவர்கள், அரசின் அறிவுறுத்தலை மீடிற திடீரென தலைமறைவான நிலையில், முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள மசூதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படை யில் உதவி ஆணையாளர் கோடிலிங்கம் தலைமையிலான சிறப்பு படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த‌து.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அவர்களை  அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர்கள்,  புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த அப்பு மேஸ்திரி தெரு கொரோனா தொற்று பரவிய பகுதியாக ஏற்கனவே போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது.

டெல்லி இமாம் தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், சமீபகாலமாக அரசின் எச்சரிக்கையை மீறி, வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு, தமிழக மசூதியில் தங்க வைக்க இடம்கொடுத்துள்ள செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்தோனேசிய தம்பதிகள் உள்ளிட்ட 9 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த மார்ச் 8ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தவர்கள், பல்வேறு பள்ளிவாசல்களில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு, மார்ச் 24-ல் ராமநாதபுரம் வந்தபோது, போலீஸார் பிடித்து சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 8 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றத் உத்தரவிட்ட நிலையில்,  இந்தோனேஷிய  இஸ்லாமியர்கள்  9 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.