சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். இது அவர் ஏற்றுவது 4வது முறையாகும்.
நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார். இதைத்தொடர்ந்து, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலைமைச்சர் மு.கஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்,.
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முக்கிய விருந்தினர்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனப்டி, விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி, சுதந்திர தின உரை ஆற்றினார். முன்னதாக திறந்த ஜீப்பில் வந்த முதல்வருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் பின்னர் தேசிய கொடியை ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.