index
ஐசக் நியூட்டன் பிறந்த தினம்
இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் 1643ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட ஐசக், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்தார்.
இவரது ஆராய்ச்சியின் முடிவே ,புகழ்பெற்ற நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை விதி தோன்ற காரணமாக அமைந்தது. நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள், நியூட்டன் வண்ணத்தகடு, மற்றும் அவரது கணித நூல்கள் போன்றவை நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஐசக் நியூட்டனை போற்றும் விதமாக நியூட்டனின் மறைவுக்கு பிறகு அவரது கல்லறையில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் என பொறிக்கப்பட்டுள்ளது.
2
லூயி பிரெய்லி பிறந்த தினம்
பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி 1809ம் ஆண்டு இதேதினத்தில்தான் பிறந்தார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தன் கண்பார்வையை இழந்தவர் பிரெய்லி.
எனவே பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக ஒரு முறையை உருவாக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் என்னும் முறை பிரெய்லிக்கு உதவிகரமாக அமைந்தது. இம்முறையைப் பயன்படுத்தி 1829 ஆம் ஆண்டு ஒன்று முதல் ஆறு புடைப்புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார்..
இந்த முறையால்தான் பார்வையற்றவர்கள் கல்வி கற்க முடிகிறது. கண்ணிழந்தவர்களின் விரல்களைக் கண்களாக மாற்றியமைத்த மேதை, லூயி பிரெய்ல்.
imagest
 
மியான்மர் சுதந்திர தினம்
ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் இந்தியாவின் அண்டைநாடுகளுள் ஒன்றாக அமைந்த மியான்மார், பர்மா என்று அழைக்கப்பட்டது. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயர், மியான்மர் என்று மாற்றப்பட்டது. அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் தலைநகரையே மாற்றிவிட்டனர். மியான்மருக்கு பதிலாக, நைப்பியித்தௌ தலைநகரானது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.
பெரும் தொழில்கள் எல்லாம் அரசின் கையில் இருக்கிறது. விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம் இருக்கிறது
தற்போது இங்கு முஸ்லீம்களில் ஒரு பிரிவான ரோஹிங்கிய என்பவர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்குகிடையே அடிக்கடி பிரச்சனை எழுகிறது. அங்கு நடக்கும் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சங் சூகி என்ற தலைவர் தொடர்ந்து போராடி வருகிறார். சமீபத்திய தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். ஆனாலும் முழுமையான மக்களாட்சி அங்கு இன்னும் மலரவில்லை.