டெல்லி: நாட்டின் 75வது அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் முர்மு, நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம் என பெருமிதம் தெரிவித்தார்.

   சம்விதான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினம், ஜனவரி 26, 1950 இல் நடைமுறைக்கு வந்த 1949 இல் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாட்டின் 75வது அரசியலமைப்பு தினம் என்பதால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்று நாடு முழுவதும், இந்தியாவின் 75வது அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு இன்று நடைபெற்று வருகின்றது.  இதையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இரு அமர்வு  சிறப்பு கூட்டத்தில்   குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

முன்னதாக, ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்யசபா லோபி மல்லிகார்ஜுன் கார்கே, லோக்சபா லோபி ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜு மற்றும் பலர் இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு முகப்புரையை வாசித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முர்மு, அரசமைப்புச் சட்டத்தின் சம்ஸ்கிருதம், மைதிலி மொழி பதிப்புகள் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படப்பட்டது. அத்துடன், ‘அரமைப்புச் சட்ட உருவாக்கம்: ஒரு பாா்வை’, ‘அரசமைப்புச் சட்ட உருவாக்கமும் அதன் பெருமைமிகு பயணமும்’ என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.

அதையடுத்து,  அரசமைப்புச் சட்டம் ஏற்பட்டதன் 75-ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முர்மு  “நமது அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம். நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம். அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு இலட்சியங்களை உள்வாங்கி, அடிப்படைக் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சம்விதன் சதானில் நடைபெற்ற அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்வில், மாநிலங்களவை தலைவரான துணைகுடியரசு தலைவர், ஜக்தீப் தன்கர் கூறுகையில், “இந்த முக்கியமான நாள், உலகின் மிகப்பெரிய மற்றும் ஆற்றல்மிக்க ஜனநாயகத்திற்கான குறிப்பிடத்தக்க சாதனையாக, பாரதம் தனது அரசியலமைப்பை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த முக்கியமான நாள் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கிறது. குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு, பரவலான டிஜிட்டல் தத்தெடுப்பு, இவை அனைத்தும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகின்றன நமது அரசியலமைப்பு இந்திய ஜனநாயகத்தை திறம்பட குணப்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கிறது, இது நமது அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். சுமார் 3 ஆண்டுகளாக நமது நாட்டின் தலைவிதியை வடிவமைத்தவர்…” என புகழாரம் சூட்டடினார்,.

நிகழ்ச்சியில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா,  “இன்று அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில், நமது அரசியலமைப்பு சட்டமாக்கப்பட்டது. ஜனாதிபதி தலைமையில், இன்று ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து அரசியல் சாசனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் உத்வேகத்தின் பேரில், நமது அரசியலமைப்புச் சட்டம், நமது மக்களின் பல ஆண்டுகால தவம், தியாகம், வலிமை மற்றும் திறனின் விளைவாகும். சுமார் 3 வருட கடின உழைப்பிற்குப் பிறகு, நாட்டின் புவியியல் மற்றும் சமூகப் பன்முகத்தன்மையை ஒரே இழையாகப் பிணைக்கும் அரசியலமைப்பை உருவாக்கினார்கள் என கூறினார்.

இந்த சிறப்புஅமர்வில்  குடியரசு தலைவர் உடன், குடியரசுத்துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.