சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது அறிவித்துள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முதலாக தேசிய கொடியை ஏற்றுகிறார். அதுபோல மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 3 காவல்நிலையங்களுக்கு தமிழகஅரசு சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதை அறிவித்து உள்ளது. அதன்படி, திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை, திண்டுக்கல் வட்ட காவல்நிலையம் உள்பட 3 காவல்நிலையங்கள் விருதுகள் பெறுகின்றன.
Patrikai.com official YouTube Channel