திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூவர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை சுமார் 10000 ஐ தாண்டி வருகிறது.  தற்போது இங்கு 2.27 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு அதில் 2036 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பிறகு நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம், “திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதுவரை 402 பேர் குணம் டைந்து தற்போது 338 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.   கடந்த ஜூலை மாதம் திருப்பதி ஏழுமலையானைத்  தரிசிக்க 2 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளனர்.

 \இந்த பக்தர்கள் எவ்வித தடையும் இன்றி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  இவர்கள் 16 கோடி 9 லட்சம் ரூபாய் காணிக்கை அளித்துள்ளனர்.   இங்கு கடந்த 2 மாதங்களில் 11  லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன”எனத் தெரிவித்துள்ளார்.