அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலசுப்ரமணியம் ரமேஷ் என்ற 73 வயது நபர் ஒரு பெண்ணிடம் நான்கு முறை தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
7 முறை இந்த 4 பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்களின் விவரம் வெளியிடப்படவில்லை.
டிசம்பர் 13ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]