டெல்லி: நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்… தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.,
முன்னதாக, குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக டெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வந்தார். அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ராஜபாதைக்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து ராஜபாதைக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வருகை தந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் முப்படை தளபதிகளை ஜனாதிபதிக்கு அறிமுப்படுத்தினார் பிரதமர் மோடி. அதன்பின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக வங்கதேசத்தின் முப்படை வீரர்களின் இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு. வங்கதேசத்தின் 122பேர் அடங்கிய முப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியுடன் வான் சாகசம் நடத்தப்பட்டது.
அத்துடன் பிரமோஸ் ஏவுகணை, ரஃபேல் போர் விமானம் உள்பட ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.