ல்லி
ஆன்லைன் மோசடி காரணமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72,28,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையொட்டி கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்குகள் ஆன்லைன் மோசடி புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் சுமார் 3 லட்சம் கணக்குகள் பயனர்கள் புகார் அளிப்பதற்கு முன்பே தடை செய்யப்பட்டதாக வாட்ஸ் அப் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel