i

ரியாத்: சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 717 பேர் இறந்ததற்கு சவுதி இளவரசர் தான் காரணம் என லெபானான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பண்டிகையின் போது, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மக்கள், முன்னதாகவே மெக்கா நகருக்கு வந்தனர்.

இந்நிலையில்,மினாவில் உள்ள சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் சிக்கி காயமடைந்த 863 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் இறந்தனர்.

இந்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், மினா நகருக்கு வருகை தந்ததை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக, யாத்ரீகர்கள் சென்ற பாதை திடீரென மாற்றப்பட்டது எனவும், இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் லெபனான் செய்தி நிறுவனம் கூறுகிறது. .

சவுதி இளவரசர் , தனது பெரிய பரிவாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் வந்ததாகவும், இதை சவுதி அரசு மறைப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால், இந்த குற்றசாட்டை சவுதி அரசு மறுத்துள்ளது.

(படம்: மெக்கா மசூதி – விபத்து – பார்வையிடும் மன்னர் குழுமம்)