புதுடெல்லி:
நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை  ‘பாரத விழா’ என்ற பெயரில் 15 நாள் கொண்டாட மத்திய அரசு ஏற்கனவே  அறிவித்து இருந்தது.
70th-independence-
அதன்படி, இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி  இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கலந்துகொண்டு, விழாவை தொடங்கி வைக்கிறார்.
இன்று பிற்பகலில்  ம.பி.யில் உள்ள சந்திரசேகர் ஆசாத்  நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சுதந்திர தினத்தின் 70வது ஆண்டின் 15 நாள் விழாவை துவக்கி வைக்கிறார். .
இந்திய சுதந்திர  போராட்டத்தில் முக்கியமான நிகழ்வான வெள்ளையனே வெளியேறு தினத்தின் 75வது ஆண்டு விழா இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கய்யா நாயுடு  உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதற்கான பிரசார பயணத்தை பிரதமர் மோடி இன்று பிற்பகலில் தொடங்கி  வைக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் சுதந்திர போராட்ட தலைவர் சந்திரகேசர் ஆசாத் பிறந்த இடமான பாப்ராவில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்கும் பிரதமர் மோடி சுதந்திர தின விழா பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறார்.