சென்னை: தமிழ்நாட்டில் வரும்  வரும் 7ந்தேதி சனிக்கிழமை வருவதாலும், வார விடுமுறையொட்டியும்  தங்களது சொந்த ஊருக்கு70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களையொட்டி தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்து உள்ளது.  அதன்படி, செப். 5,6,7 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/09/2024, 06/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 07/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாள்களில் 1030 பேருந்துகளும், மற்றும் 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ள இதேபோல பிற பகுதிகளில் இருந்தும் தமிழகம் முழுவதும் கூடுதலாக பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  அதுபோல சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில், வரும்  8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில்,  அரசு பஸ்களில் இன்று பயணம் செய்ய காலை நிலவரப்படி 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். தமிழகத்தின் பல இடங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னைக்கு வருவதற்கு மட்டும் 22 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் பயணத்தை உறுதி செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து 27 ஆயிரம் பேரும், சென்னையில் இருந்து 15 ஆயிரம் பேரும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்களின் பயணம் அதிகரித்து உள்ளது. கூட்டத்தை சமாளிக்க தேவைக்கேற்ப கூடுதலாக சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்து உள்ளோம். முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணத்தை தொடர கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.