டில்லி,
கடந்த ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்தியஅரசு அமல்படுத்திய பின் பண பரிவர்த்தனையில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து தற்போது, பினாமி பெயரில் பணப்பரிவர்த்தனை செய்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
பினாமி சொத்துகள் சட்டம் 2016ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
இதன்படி தங்கள் பணத்தை வேறொருவர் கணக்கில் செலுத்துபவர்கள் மற்றும் இதை அனுமதிக்கும் பினாமி களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகளிடம் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பரிமாற்றத் தொகையில் இருந்து 10 சதவீதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ள அதிகாரிகள், வருமானவரிச் சட்டம் 1961ன் படி பினாமி சொத்துகள் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.