பெங்களூரு:
டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வெளியான தீ நடனத்தை பார்த்து, அதுபோல நடனமான முயற்சி செய்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
கன்னடத்தில் நந்தினி என்ற டிவி சீரியல் சன் டிவி குரூப்பான உதயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது கன்னட மக்களிடையே வெகு பிரபலமான டிவி சீரியல் தொடர். இந்த தொடரை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.
இந்த தொடரின் ஒரு காட்சியில், நடனமாடிய நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன.
இந்த தொடரை தொடர்ந்து பார்த்து வந்த அந்த சிறுமி, தொடரில் வந்ததுபோலதான தானும் நடனம் ஆடி விரும்பியபோது, தவறுதலாக தீ அந்த சிறுமியின் உடலில் பிடித்து, பரிதாபமாக இறந்தாள்.
கர்நாடகமாக மாநிலம். தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹரா பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத்- சைத்ரா தம்பதியரின் மகள் பிரார்த்தனா. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று, பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, அந்த சீரியலில் வந்த தீ நடனத்தைப்போல ஆடி முயற்சி செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பிரார்த்தனாவின் உடைகளில் தீப்பற்றிக்கொண்டது. தீ உடல் முழுவதும் பரவியது.
இதனால் வலி தாங்காமல் அலறிய சிறுமியின் சத்தத்தைக்கேட்டு பக்கத்து வீட்டினர், ஓடிவந்து சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனே அவரை அருகிலுள்ள தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டுசென்றனர்.
அங்கு 15 நாட்களுக்கும் மேலாக சிகிசிச்சை பெற்று வந்த அந்த சிறுமி பரிதாபமாக மரணமடைந்தாள்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் தந்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.