குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென அதிக எடை கொண்ட கல் உருண்டு வந்து விழுந்ததில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் மழை காரணமாக தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. அப்போது ஐந்தருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது கல் ஒன்று உருண்டு வந்து விழுந்தது. இதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.