சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை என சமூக விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கும் வரும் நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 24ந்தேதி) அன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 7 செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சியாளர்களை விமர்சிக்கும் செய்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை கைதுசெய்வதில் தீவிரம் காட்டும் காவல்துறை, சமூக விரோத செயல்களை தடுப்பதில் தீவிரம் காட்டவில்லை என குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது. பல இடங்களில் மறைந்து நின்றுகொண்டு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டும் காவல்துறையினர், அந்தபகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிபடுத்த முன்வருவது இல்லை. பொதுமக்கள் மீது அக்கறை செலுத்துவது இல்லை, முக்கிய இடங்களில், பூங்கா போன்ற பல இடங்களில் நடைபெறும் போதை விற்பனையை தடுப்பது இல்லை, இதுபோன்ற காரணங்களால்தான், கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்று சரமாரி குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிள்ள நெட்டிசன்கள் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்ற னர் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. நேற்று காலை 6 முதல் 7 மணி வரை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 7 இடங்களில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், இதன்மூலம் 15 சவரனுக்கு மேல் நகை களவாப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கை பறிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.