சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயமாகிறது. அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2011 மக்கள் தொகை கண்கெடுப்பின்படி, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப அரசின் பயன்பாடுகள் எளிதாக மேற்கொள்ளும் வகையில் புதிய நகராட்சி கள், மாநராட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
.2024 ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, மாநிலத்தில் 25 மாநகராட்சிகள் ,38 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஜனவரி மாதம் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் மேலும், 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது .
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக (போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி) தரம் உயர்த்தப்பட்டுள்ளன.