தைவான் தொழிற்சாலை தீ விபத்து : 7 பேர் பலி

Must read

மாதிரி புகைப்படம்

தைவான்

தைவான் கம்பியூட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 5 தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் மரணம் அடைந்தனர்.

தைவானில் உள்ள தௌவான் நகரில் சின்பூன் என்னும் தொழிற்குழுமத்துக்கு சொந்தமான கம்பியூட்டர் தொழிற்சாலை ஒன்று உள்ளது.    இந்த தொழிற்சாலையில் நேற்று திடிரென தீ பிடித்தது.   ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகம் ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் இல்லை.    அதனால் தீ பிடித்ததை யாரும் கவனிக்கவில்லை.

தொழிற்சாலைக்குள் பல ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டதால் தீ விரைவில் பரவியது.   தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க அந்த தொழிற்சாலைக்குள் சென்ற போது ரசாயன டிரம்கள் வெடித்ததால்  வீரர்களில் 5 பேரால் தப்பி வர முடியவில்லை.

அந்த 5 தீயணைப்பு வீரர்களும் அங்கேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.    அத்துடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இரு ஊழியர்களும் தீயில் சிக்கி உயிர் இழந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர இல்லாதது தற்போது தெரிய வந்துள்ளது.

More articles

Latest article