சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எனக்கூறி 7 சிலைகளை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான சிலைகள் திருடு போயுள்ளது. அதை மீட்கும் பணியில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு பிரிவு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்கூட மாமல்லபுரம் அருகே, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தொன்மையான பார்வதி சிலை ஒன்று பதுக்கி வைத்து வெளிநாட்டுக்கு கடத்த இருந்த 11 பழமையான உலோகச் சிலைகள் மீட்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எனக்கூறி 7 சிலைகளை கடத்தி விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து நடராஜர் சிலை உள்பட 7 சிலைகள் மீட்கப்பட்டது.
இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட  காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் போலீசார். ஒருவர் கிரிமினல் வழக்கில் தொடர்புடையதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றொருவர் ஏஆர் கான்ஸ்டபிள் பணியில் உள்ளார்.  இவர்களில் காவலர் இளங்குமரன் கைது செய்யப்பட்டு உள்ளர். மேலும்,  பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் 2 பேர் உள்பட மொத்த  4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக உறுப்பினரான அலெக்சான்டர் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு தஞ்சை மாவட்டம், திருப்பணந்தாள் கோயில் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.