சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் பார்கவுன்சில் தலைவரும், தற்போது பாஜகவின் வழக்கறிஞர்அணி தலைவராகவும் உள்ள வழக்கறிஞர்  பால் கனகராஜிடம் காவல்துறை யினர் சுமார்  7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதுதொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், பல வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், பாஜக வழக்கறிஞர் அணி தலைவருமான பால் கனகராஜ்-க்கு காவல்துறை விசாரணைக்கு அழைத்திருந்தது. அதன்படி, நேற்று (ஆகஸ்டு 9ந்தேதி)  எழும்பூரில் உள்ள காவல்துறை தனிப்பிரிவில் பால்கனகராஜ் நேரில்ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியது சம்பந்தமாக கடலூரைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரைச் செம்பியம் காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவரும், பாஜக பிரமுகரும், பல்வேறு வழக்குகளில் வாதாடிய பால் கனகராஜை நேரில் ஆஜராகச் சொல்லி காவல்துறை அவருக்குச் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று காலை புதுப்பேட்டை காவல் குடியிருப்பில் உள்ள விசாரணை அலுவலகத்தில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை சுமார் 7மணி நேரம் நடைபெற்றது. இதில்அவரிடம் கேட்கப்பட்டது என்ன என்பது குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அப்போது,  காவல்துறையினர் தன்னிடம், பிரபல ரவுடி நாகேந்திரனுடன் தொடர்பில் இருந்தீர்களா என விசாரித்தார்கள். தொழில் நிமித்தமாக நாகேந்திரனுடன் பேசி இருக்கிறேன் என கூறினேன்   என்றவர்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எல்லா கோணங்களிலும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் குறித்து துப்பு துப்பு தும் கிடைக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் என்னை விசாரணைக்காக அழைத்து விசாரித்தனர்.

போலீஸ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் முழுமையாக ஒத்துழைப்புடன் பதிலளித்தேன்.  நான் நடத்திய வழக்குகளில் குற்றவாளிகளாக இருந்தவர்கள் பெயரை குறிப்பிட்டு கேட்டு அவர்களுக்கு உண்டான தொடர்பு, அவர்கள் என்னிடம் பேசிய தொலைபேசி தகவல்கள் எல்லாம் வைத்து விசாரித்தனர். எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த விரோதமும் இருந்ததில்லை. 2015-ல் எனக்கும் ஆம்ஸ்டராங்குக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தது. அதுவும் ஒரே வாரத்தில் சரியாகி விட்டது. பின்னர் 2016 முதல் 2024 வரை நெருங்கி பழகி வந்தோம். இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்துள்ளார்கள். இந்த கொலையில் எனக்கு துளி அளவும் சம்பந்தம் இல்லை. கொலை செய்தவர்கள் யார் என எனக்கு நேரடியாக தெரியாது என்பதை தெளிவாக எடுத்து சொல்லி உள்ளேன்.

அதுபோல சம்போ செந்தில், கொலை வழக்கில் கைதான ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் தனக்கு (பால் கனகராஜ்)  சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.